Pages

Saturday, February 15, 2020

மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி!

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில்  பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு துறை இணைந்து விடுதிகளில் தங்கி 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி முதல்கட்டமாக குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் 15.02.2020 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ம.கோவிந்தராவ் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.
                                                     
மாணவர்கள் தனக்கென்று குறிக்கோள் ஒன்றினை ஏற்படுத்திக்கொண்டு ஒழுக்கத்துடனும் விடாமுயற்சியுடனும் உழைக்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியர் தனது உரையில் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் க.சங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் செ.ரமேஷ்குமார், அரசு வேலைவாய்ப்பு மற்றும் சுயமுன்னேற்றம் குறித்து உரையாற்றினார்.

பேராசிரியர்கள் கா.செல்வகுமார் போட்டித் தேர்வுகள் குறித்தும், எஸ்.பரமேஸ்வரன் உயர்கல்வி குறித்தும் வழிகாட்டி உரையாற்றினர். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் கோ.குழந்தைவேல் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் விடுதிக் காப்பாளர்கள், மற்றும் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் அடுத்து விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற உள்ளதாக மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...