.

Pages

Thursday, February 20, 2020

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை மாதாந்திரக் கூட்டம் (படங்கள்)

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 75 வது மாதாந்திர கூட்டம் கடந்த 14-02-2020 அன்று பத்ஹா RT-RESTUARENT முதல் மாடியில் நிஜாமுதீன் அவர்களின் Flat-ல் இனிதே நடைபெற்றது. அதில் நமதூர் வாசிகள்  பலரும் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராஅத்                 : அகமது அஷ்ரப் ( துணை தலைவர் )
முன்னிலை           : S.சரபுதீன் ( தலைவர் )
வரவேற்புரை       : N.அபூபக்கர் ( பொருளாளர் )
சிறப்புரை              : A.M.அஹமது ஜலீல் ( செயலாளர் )
நன்றியுரை     :  A. சாதிக் அகமது  ( இணைத்தலைவர் )

தீர்மானங்கள்:
1) ABM-ன் தலைமையகத்தில் நடைபெற்று வரும் மாதாந்திர கூட்டங்களின் வெளிநாட்டு கிளையின் நிறுவாகிகளின் கடிதங்கள் வாசிக்கப்படுவதால், வெளிநாட்டிலுள்ள அனைத்து ABM-ன் கிளை நிறுவனங்களில்  நடைபெறும் மாதாந்திர கூட்டத்தின் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும், தீர்மானங்களையும்  தலைமையகத்திற்கு அனுப்பி கொடுத்தால் ABM-தலைமையகம் மேலும் செம்மையாக திறம்பட செயல்படுவதற்கு உறுதுணையாக அமையும் என்பதை இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 2) ABM-ன் பதிவுகள் சம்பத்தப்பட்ட பணிகள் தொய்வில்லாமல் மிகவும் விரைவில் துரிதமாக நிறைவு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் பாராட்டி கூடிய விரைவில் பணி நிறைவு பெறுவதற்காக துஆ செய்யுமாறு இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

3) ABM-ன் தலைமையகத்தில் தேர்தல் நடத்துவது சம்பந்தமான கருத்துக்களையும் அதன் தீர்மானங்களையும் இக்கூட்டத்தில் முழுமனதாக ஏற்கப்பட்டு மேலும் ஒரு சில கருத்துக்களை முன் வைக்கப்பட்டு அதாவது மூன்று வருடத்திற்கு தேர்தலை தள்ளிவைத்த காரணத்தால் வரும் ஏப்ரலில் தற்பொழுது ABM-ன் செயல்பாடுகளில் முழு ஈடுபாடு உள்ளவர்களில் புதிய இளைஞர்களை ஓரிரு-துணை-இணை-நிலைகளில் சேர்த்து பொறுப்புகளை ஒப்படைத்தால் வரும் காலத்திற்கேற்ப செம்மையாக செயல்படும் என்பதை ஒருமித்த கருத்தாக தலைமையகத்திடம்  பரிந்துறைக்கப்பட்டது.

4) நிர்வாகப் பொறுப்பிற்கான பெயர்களை முன்வைக்கும் விதமாக பல நாடுகளில் வேலை செய்து விட்டு ஊர் திரும்பிய ஆர்வமுள்ள சகோதரர்களை தலைமையகம் மூலம் அணுகி அவர்களை இச்சேவையான பொதும் பணியினை தொடர்ந்து ஊரிலும் செம்மையாக செயல்பட வாய்ப்பு அளிக்குமாறும் அதற்கான முயற்சியில் முழு முயற்சியுடன் ஒருங்கிணைப்பாளரின் துணையும் செம்மையாக புதிய பெயர்களை அணுகி இச்சேவை மையத்திற்கு மெருகூட்டும் விதமாக துரித ஏற்பாடுகளை செய்திடுமாறு கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

5) இன்ஷா அல்லாஹ் ABMR 7-ம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி வரும் மே மாதம் 1-ம் தேதி 2020 மிகவும் சிறப்பாக கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாட்டின் பிரகாரம் புதிய இடமாக பத்ஹாவில் SHIFA AL JAZEERA AUDITORIUM-தில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டு, அதற்கான முழு வரையறை ஏற்பாடுகளை வரும் மார்ச் மாத கூட்டத்தில் கலந்து ஆலோசிப்படுவது எனவும் அதற்காக ரியாத்திலுள்ள அதிரைவாசிகள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

6) இன்ஷா அல்லாஹ் வரும் அமர்வு MARCH 2020 13-ம் தேதி பத்ஹா RT- RESTUARENT முதல் மாடியில் மஃரிப்  தொழுகை முடிந்த பிறகு நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு நமதூர் வாசிகள் அனைவர்களும் முழு ஒத்துழைப்பு தந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் இந்த சேவையை சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணை செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை
 

1 comment:

  1. மாஷா அல்லாஹ் ! நண்பர் சரபுதீன் , உறவினர் நிஜாம் , அஸ்ரஃப் , சாதிக் மற்றும் ஏனைய உறவுகளின் முகம் கண்டு மற்றற்ற மகிழ்ச்சி ! ஏபி எம்மின் சேவைகள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.