Pages

Friday, February 7, 2020

அதிராம்பட்டினத்தில் மமக சார்பில் கொடியேற்றம் ~ வாழ்வாதார உதவி வழங்கல்!

அதிராம்பட்டினம், பிப்.07
மனிதநேய மக்கள் கட்சியின் 12-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அதிராம்பட்டினத்தில் கொடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர் சாதிக் பாட்சா தலைமை வகித்து, அதிராம்பட்டினத்தை சேர்ந்த பெண் பயனாளி ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக இருக்கையுடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்கினார். மேலும், 5 பயனாளிகளுக்கு தலா 5 கிலோ வீதம் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டன.

முன்னதாக, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஏ இம்தியாஸ் அகமது அக்கட்சியின் அலுவலகம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி வைத்தார்.

இதில், அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, முகமது யூசுப், ஜாஹிர் உசேன், நசுருதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...