.

Pages

Sunday, March 1, 2020

அதிராம்பட்டினம் 12-வது நாள் தொடர் போராட்டம்: பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் பங்கேற்பு!

அதிராம்பட்டினம், மார்ச் 01
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய போராட்டம் 12-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், சமுதாய அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், ஜமாத் மற்றும் கிராம பஞ்சாயத் நிர்வாகிகள் பங்கேற்று மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்துப் பேசி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் / மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லாஹ் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

முன்னதாக, தமுமுக அதிராம்பட்டினம் பேரூர் அலுவலகம் அருகில் உள்ள கொடிக்கம்பத்தில் தமுமுக கொடி ஏற்றி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது;
புதிய அரசு மருத்துவக்கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுவிழாவில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், தமிழக அரசு ஒரு மதச்சார்பற்ற அரசு எனவும், அதிமுகவும் ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிருக்கிறார். பல வதந்திகள் அரசியல் உள்நோக்கத்தோடு பரப்பப்படுவதாகவும் சொல்லிருக்கிறார்.

உண்மையிலேயே தமிழர்கள் அனைவர்களின் குடியுரிமையை பறிக்கக்கூடிய ஒரு நாசகரத் திட்டம் தான் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு மற்றும் அதைத் தொடர்ந்து வரக்கூடிய என்.ஆர்.சி.

முதல்வர் கூறியது போல், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் வழியில் அவரது அரசு செயல்படுகிறதென்றால், தமிழகத்தில் என்பிஆர் கணக்கெடுப்பை நடத்த மாட்டோம். என்.ஆர்.சி யை எதிர்க்கிறோம், சி.ஏ.ஏ வை எதிர்க்கிறோம் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

அப்போது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை ஐ.எம் பாதுஷா, தமுமுக மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எம். நஸ்ருத்தீன் ஸாலிகு, தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக்குழுத் தலைவர் முகமது சேக் ராவுத்தர் உறுப்பினர்கள் ஏ.ஆர் சாதிக் பாட்சா, முகமது தமீம், அதிராம்பட்டினம் பேரூர் பொறுப்புக்குழு தலைவர் நெய்னா முகமது, உறுப்பினர்கள் எச்.செய்யது புஹாரி, எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, எம். சாகுல் ஹமீது, அபுல் ஹசன் சாதலி, நியாஸ், ஹக்கீம், முன்னாள் செயலாளர் ஜாஹிர் உசேன், சேக் நசுருதீன், முனாப் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.