Pages

Tuesday, March 24, 2020

அதிரம்பட்டினத்தில் தங்கிருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்கள் 31 பேருக்கு கண்காணிப்பு முத்திரை (படங்கள்)

அதிராம்பட்டினம், மார்ச் 24
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதிராம்பட்டினத்தில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வரும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் கணக்கெடுக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வருவாய் ஆய்வாளர் ஆர். சரவணகுமார் மேற்பாா்வையில், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் முகமது அசாருதீன், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன், கிராம உதவியாளர்கள் பத்மநாபன், பாலா ஆகியோா் அடங்கிய சிறப்புக் குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா்.

இதில், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக அதிராம்பட்டினத்தில் தங்கிருந்து கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வரும் பிஹார். மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்த 31 தொழிலாளர்களுக்கு கைகளில் அழியாத மை மூலம் முத்திரை பதிக்கப்பட்டது. இவர்களின் உடல்நலம் குறித்து சுகாதார பிரிவு அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருவா்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...