.

Pages

Friday, March 13, 2020

தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச் 13
தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் கிளை வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்திற்கு கிளை மேலாளர் திருமதி ஆர். பாலா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக வங்கியின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முகமது அஸ்ரப் அலி கலந்துகொண்டு பேசியது;
கேரளத்தை தலைமையிடமாகக் கொண்ட தனலட்சுமி வங்கி, தனது 93-வது ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க சேவையை அதிநவீன தொழில்நுட்பத்துடனும், ஒப்பற்ற திட்டங்களுடனும் வழங்கி வருகிறது. வங்கி ரூ.63.18 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. வங்கியின் வாரக்கடன் 1.62 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்கள் வங்கி சிறப்பான வளர்ச்சியையும், மேலாண்மையையும் பறை சாற்றுகின்றன.

தென்னிந்திய வங்கிகளின் ஸ்த்திரத்தன்மை குறித்து சில வதந்திகள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால் சர்வசேத விதிகளின் படியும், பாரத ரிசர்வ் வங்கியின் விதிப்படியும் ஒரு வங்கியின் ஸ்திரத்தன்மையானது CRAR எனப்படும் Capital Risk Weighted Asset Ratio என்ற விகிதத்தின் படியே அளவிடப்பட வேண்டும். இதில், மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் 31-12-2019 காலாண்டு நிலவரப்படி, தனலட்சுமி வங்கியின் விகிதமானது 13.55 சதவிகிதமாகும். ஆனால் பாரத ரிசர்வ் வங்கியின் விதிப்படி 9 சதவிகிதம் இருந்தாலே போதுமானது.

எமது வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற வங்கிச்சேவைகளை தொடர்ந்து வழங்கிட தயாராக இருக்கிறது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்குமாறு அன்போடு வேண்டுகிறோம் என்றார்.

மேலும், கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். நிறைவில், கிளை துணை மேலாளர் டி.சுரேஷ் நன்றி கூறினார்.

முன்னதாக, தனலட்சுமி வங்கி அதிராம்பட்டினம் கிளை வாடிக்கையாளர்கள் சந்திப்புக் கூட்டம் அதிராம்பட்டினம் முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் அருகில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக, வங்கியின் சென்னை மண்டல முதுநிலை மேலாளர் முகமது அஸ்ரப் அலி கலந்துகொண்டு, வாடிக்கையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் பேசினார். இதுபற்றி, வெளிநாடு வாழ் உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை, பிரசன்னா, வெங்கடேஷ், ரம்யா, சண்முகம் ஆகியோர் செய்திருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.