.

Pages

Monday, March 30, 2020

அதிராம்பட்டினத்தில் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் அமைப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்க திட்டம்!

அதிராம்பட்டினம், மார்ச் 30
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசின் 144 தடை உத்தரவை அடுத்து, அதிராம்பட்டினத்தில் வருமானத்திற்கு வழி இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடக்கும் அன்றாட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் நோக்கில், அதிராம்பட்டினத்தில் தன்னார்வலர்களால் கரோனா விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் ஏழைப் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்கு திட்டமிட்டு, அதற்கு தேவையான பொருளாதார உதவிகளை வழங்க வேண்டுமென அக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அக்குழுவினர் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பது; 
அதிரை கொரோனா உதவி குழுமத்தின் முக்கிய அறிவிப்பு:
உலக நாடுகளெங்கும் கொரோனா வைரஸ் பெரும் துயரை ஏற்படுத்தி வரும் நிலையில் நமது மத்திய அரசானது அதனை தடுக்கும் வகையில் 21நாள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் அன்றாட அத்தியாவசிய தேவைகளுக்கே கடன் பெற்று செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு நமது அதிராம்பட்டினத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கும் அன்றாட பிழைப்பு நடத்தி வாழ்வை கழித்து வரும் ஏழைகளுக்கும் உதவும் வகையில் கஜா புயலில் மக்களுக்காக மிகப்பெரிய களபணியாற்றிய சமூக அக்கறை நிறைந்த இளைஞர் பெருமக்களால் அதிரை கோரோனா உதவி குழுமம் என்கின்ற அடையாளத்துடன் களம் இறங்கியுள்ளனர்.

இதுபோன்ற ஏழை மக்களுக்கு அத்தியாவசிய தேவையான அன்றாட உணவுக்கு வழிவகுக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு,பால் பவுடர், எண்ணெய் மற்றும் சமையல் பொருட்கள் அடங்கிய ரூபாய் 1500 மதிப்புள்ள மளிகை பொருட்கள் அடங்கிய கிட் சுமார் 300 குடும்பங்களுக்கு வழங்கலாம் என வாட்சப்ப் குழுமம் மூலம் மசூரா செய்யப்பட்டு அதன் செயல்பாடுகளும் வாட்சப்ப் குழுமம் மூலம் அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மாலிக், ஆரிஃப், நவாஸ், கனி, கலீஃபா, காலித், சபி, அப்ரித், சமீர், அஜ்மல், அலெக்ஸ், ஹாஜா, இப்ராஹிம்ஷா, ரஹ்மான் மற்றும் பேராசிரியர் செய்யது அகமது கபீர் ஆகிய சகோதரர்கள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக அதிரையில் 250 குடும்பங்களுக்கு பால், பிஸ்கட் ஆகிய பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மக்களுக்கு உதவும் நோக்கில் அரசின் அரசாணைக்கு ஏற்ப நோய் பரவாமல் அரசு அனுமதித்த மளிகை கடையில் பொருட்களை பெற்று வழங்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பல குடும்பங்களுக்கு உதவும் வகையில் தங்களால் இயன்ற உதவிகளை செய்து மக்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொருளாதார உதவி செய்பவர்கள் கீழே உள்ள வங்கி கணக்கு எண் மூலமாக உங்களின் பொருளாதாரத்தை செலுத்தலாம்:-

Account Holder Name :- Imran Khan.T
Account number :- 607028100
Bank Name :- Indian bank
Branch : Adirampattinam Branch
IFSC CODE:-IDIB000A110

Google Pay:-
Name:- THAJ IMRAN
Mobile Number:- 9677741851

Phone Pay:-
Name:- IMRAN KHAN
Mobile Number:- 9677741851

மேலும் தகவலுக்கு மற்றும் அவசர உதவிகளுக்கு:-

அதிரை கொரோனா உதவி குழுமம்,
அதிராம்பட்டினம்,
தஞ்சாவூர் மாவட்டம்.

தொடர்புக்கு:-
பேராசிரியர் கபீர்:-8883184888,
மாலிக்:-6374384250,
நவாஸ்:-9944186538,
ஆரிஃப்:-9940863013,
ஷபி:-9994836089,
காலித்:-8056205080,
கனி:-9092458491,
சமீர்:-9791418704.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.