Pages

Friday, March 13, 2020

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழிப்புணர்வுப் பேரணி!

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கூறும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒரு வாரகாலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டும் என்ற தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பை அடுத்து,  தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 09-03-2020 தொடங்கி ஒருவார காலம் நடைபெற்று வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக இன்று  (13.03.2020) ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி தஞ்சை இரயில் நிலையம் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக மாநகராட்சி அலுவலகம் சென்றடைந்தது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இதில் இருநூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று  ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை அமைப்பது தொடர்பில் துண்டு பிரசுரங்கள் அனைத்து கடைகளுக்கும் வழங்கப்பட்டன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் 27-12-1956இல் இயற்றப்பட்டு 1957 சனவரி 19 ஆளுநரின் இசைவைப் பெற்றது.  இது 1957 சனவரி 23 தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.  இதைத் தொடர்ந்து ஆட்சிமொழிச் செயலாக்கப் பணிகள் அரசுத் துறைகளில் வேகம் பெற்றன.  துறைதோறும் ஆட்சிசொல் அகராதிகள் வெளியிடப்பட்டன.  ஏராளமான கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு கலைச்சொல்லகராதிகள் தயாரிக்கப்பட்டன.  இவற்றை எல்லாம் நினைவுகூறும் வகையிலேயே தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

மேலும் கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது.  அரசாணையின்படி வணிக நிறுவனங்களில் கடைகளில் பெயர்ப் பலகைகளில் தமிழில் பெரிய அளவினதாகவும் அதற்கு அடுத்து ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை அமைக்கப்பட வேண்டும்.  வணிகர்கள் அரசினுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தொன்மை மிகு தமிழ் மொழி பல எதிர்ப்புகளைச் சந்தித்து வெற்றி பெற்ற போதிலும் தமிழ் இலக்கியங்களே அறியாத இன்றைய தலைமுறையினர்களுக்கு அரசினுடைய இம்மாதிரியான முயற்சிகள் பேருதவியாக அமையும.;

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜானகி இரவீந்தரன், தஞ்சாவூர் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் கா.பொ.இராசேந்திரன, தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவை செயலாளர் பழ.மாறவர்மன், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் தலைவர் ஆதி.நெடுஞ்செழியன், கவிஞர் வல்லம் தாஜ்பால், முனைவர் பேராசிரியர் இந்திராகாந்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூத்த தமிழறிஞர்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...