.

Pages

Monday, March 30, 2020

தஞ்சை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு!

அதிரை நியூஸ்: மார்ச் 30
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் முன்னிலையில் இன்று (30.03.2020) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தில் கொரோனா புகார்கள் மற்றும் சந்தேகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள், மாவட்ட, கோட்ட, வட்டார மற்றும் பொது வினியோக அங்காடிகள் அளவிலான குழுக்களின் செயல்பாடுகள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள், கூடுதலாக பணியமர்த்தப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக நுட்புனர்களின் எண்ணிக்கை விவரங்கள், தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை விவரங்கள், அத்தியாவசிய பொருட்களை தடையின்றி எடுத்து செல்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்டுள்ள மருத்துவ முகாம்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு செயல்முறைகள், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விவரங்கள், 144 தடை உத்தரவு செயல்படுத்துதல் ஆகியவை குறித்து  வேளாண்மைத் துறை அமைச்சர் கேட்டறிந்தார்.

பின்னர், ஆய்வுக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை அமைச்சர் பேசியதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் தஞ்சாவூர் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்திட வேண்டும். சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அனைத்து துறைகளும் போர்க்கால அடிப்படையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.

வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்து பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் தற்போது வரை பணியாற்றியதைப் போல, கொரோனா நோய் முற்றிலுமாக ஒழியும் வரை பணியாற்ற வேண்டும். இவ்வாறு மாண்புமிகு வேளாண்மைத் துறை அமைச்சர் பேசினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவில் செயல்பட்டு வரும் கொரோனா கட்டுப்பாட்டு அறையினை மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர். குமுதா லிங்கராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மீனாட்சி, தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.