.

Pages

Tuesday, March 24, 2020

ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் முயற்சி!

தஞ்சாவூர் மாவட்டம், அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் பொதுமக்கள் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுவது தொடர்பான செயல்விளக்கத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் பார்வையிட்டார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு 1183 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுக்களில் உறுப்பினர்களாக உள்ள நியாய விலைக் கடை விற்பனையாளர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களின் பகுதிகளில் வீடு வீடாக சென்று வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்தால், அவர்களை கண்டறிந்து, அவர்களின் கையில் முத்திரை வைத்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டின் முன்புறம் விவரங்கள் ஒட்டப்படுகிறது. இதன் மூலம் கொரோனா நோய் அறிகுறி உள்ளவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பிறருக்கு பரவுவதையும் தடுக்க முடியும்.

மேலும், வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்துள்ளவர்களின் விவரங்கள் குறித்து பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கும்பகோணம் அரசு மருத்துவமனை, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சை வழங்கிடவும் சிறப்பு பிரிவுகள் மற்றும் படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.     

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பின்பற்றி முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். மருந்துக்கடைகள், பெட்ரோல் பங்குகள், பால் கடைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் வழக்கம்போல் இயங்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் இடங்களில் இடைவெளி விட்டு வரிசையில் நின்று பொருட்களை வாங்க வேண்டும். முதியோர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சை சேவைகள் தடையின்றி கிடைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த 765 நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உத்தரவுகளை முழுமையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராணி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்து மீனாட்சி, தஞ்சாவூர் மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம், மாவட்ட மலேரியா அலுவலர் போத்திப் பிள்ளை மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.