Pages

Friday, April 3, 2020

அதிராம்பட்டினத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக கணக்கெடுப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.03
கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தகவல் சேகரிக்க அதிராம்பட்டினத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பொது சுகாதாரத் துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கரோனா நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அதிராம்பட்டினத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் வீட வீடாக சென்று தீவிர கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பின் போது, வீடுகளில் கர்ப்பிணி பெண்கள் உள்ளனரா, பிரசவித்த தாய்மார்கள் இருக்கின்றனரா, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 60 வயதுக்கு மேல், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து யாராவது தங்கி உள்ளனரா, சர்க்கரை, காசநோய், கேன்சர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கின்றனரா, குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு வெளிநபர்கள் வந்து செல்கின்றனரா போன்ற விவரங்களை கேட்டறிந்து அவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் ஆவணப்படுத்தி வருகின்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...