Pages

Wednesday, April 8, 2020

அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.08
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளஸ்டன் புஷ்பராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் மு.மாஹின் அபூபக்கர் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் ம.இளஞ்செழியன் தலைமையில்,
அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் பி.பழனிவேலு, துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், வர்த்தகப் பகுதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இருப்பிடம் உள்ளிட்டப் பகுதிகளில் தீயணைப்பு வாகனம் மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்தினை தூய்மைப் பணியாளா்கள் உதவியோடு, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் குழுவினர் தெளித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...