.

Pages

Wednesday, April 22, 2020

'ஊர் கட்டுப்பாடு' எனக்கூறி சொந்த நிலங்களுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: தென்னை விவசாயிகள் வேதனை!

அதிராம்பட்டினம், ஏப்.22
'ஊர் கட்டுப்பாடு' எனக்கூறி சொந்த நிலங்களுக்குள் செல்ல அனுமதிக்க மறுப்பதால், அன்றாட விவசாயப்பணிகள் பாதிப்பு. உரிய நேரத்தில் தண்ணீர் பாய்ச்சாததால் தென்னை கன்றுகள் கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அதிராம்பட்டினம் பகுதி தென்னை விவசாயிகள் கூறியது;
கடந்த 2018 ஆம் ஆண்டு வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தும், முறிந்தும் கீழே விழுந்து பெரும் இழப்பை சந்தித்தோம். இந்த இழப்பில் இருந்து எப்படி மீள்வது என தெரியாமல் தவித்து வந்தோம். இதையடுத்து, பலரிடம் கடன் பெற்று சாய்ந்த மரங்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் தென்னை கன்றுகள் நடவு செய்து தினமும் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வந்தோம்.

இந்நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எனக்கூறி, அதிராம்பட்டினம் சுற்றுப்புற கிராமங்களின் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே தடுப்பு வைத்து அடைத்திருப்பதால், விவசாய நிலங்களுக்கு சென்று அன்றாட விவசாயப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்படுகிறது. திடீர் கட்டுப்பாடு ஏன் என வினவினால், 'உங்கள் ஊரில் குரோனாவாம்', 'உங்களை அனுமதிக்க வேண்டாம் என்று எங்கள் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகக் கூறுகின்றனர். எங்களது சொந்த நிலங்களுக்கு சென்று விவசாயப்பணிகளை மேற்கொள்ள அனுமதி மறுப்பது எங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது.

இதனால், தென்னை கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, எருது, உரம் வைப்பது உள்ளிட்ட அன்றாட விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடும் வெப்பம் நிலவி வருவதால், தென்னை கன்றுகள் கருகி அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தென்னை மரங்களில் குறித்த காலக்கெடுவில் தேங்காய் பறிப்பதை தவர விடுவதால், மரங்களிலிருந்து தேங்காய்கள் தானாக கீழே விழுந்து அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றனர் வேதனையுடன்.

இதுகுறித்து அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியது;
இதுகுறித்து தென்னை விவசாயிகளிடமிருந்து கோரிக்கை வந்ததும் மிகுந்த வேதனை அடைந்தோம். இதுபற்றி பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கவனத்துக்கு எடுத்துச்சென்று, விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு சென்றுவர அனுமதிக்க மறுக்கும் கிராம மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டோம். இதையடுத்து, விவசாயிகள் தங்களது சொந்த நிலங்களுக்கு செல்ல அனுமதிக்க மறுக்கும் நபரின் பெயர், கிராமப் பகுதியின் பெயர், பாதிக்கப்பட்ட விவசாயி பெயர் ஆகிய விவரங்களை தெரிவித்தால், அங்கு, வட்டார வளர்ச்சி அலுவலரை அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் தெரிவித்தார் என்றனர்.

2 comments:

  1. அஸ்ஸலாமுஅலைக்கும் அனைத்து முஹல்லா கூட்டமைப்புக்கு.... தனி நபர் யாரும்தடுக்கவில்லை....மாறாக ஒரு கிராமமே தடுக்குது புரிந்துக்கொள்ளுங்கள்ல்

    ReplyDelete
  2. இதுபோன்ற RSSன் மறைமுகமாக அப்பாவிகளை தூண்டிவிடும் செயல்களை குவைத் Mejbel Al Sharika, a Kuwait Lawyer and Director of International Human Rights , UN council அவர்களுக்கு இமெய்ல் மூலம் அனுப்புங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.