.

Pages

Saturday, April 4, 2020

அதிராம்பட்டினத்தில் சுகாதாரத்துறையினர் ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஏப்.04
கரோனா சமூகப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, அதிராம்பட்டினத்தில் சுகாதராத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமையில், வட்டார மருத்துவ அலுவலர் ரஞ்சித், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆர். அண்ணாதுரை, தாமரங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் முத்துசாமி, ரவிச்சந்திரன், அற்புதராஜ், குணசேகரன், ராமநாதன், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் ஆகியோர் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் பகுதிகளில் கடந்த மார்ச் 30 ந் தேதி முதல் ஆய்வு மேற்கொண்டு, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புதாரர்களிடம் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா என பரிசோதனை செய்தனர். லேசான காய்ச்சல் இருந்தவா்களிடம் அதிராம்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறையினா் அறிவுரை வழங்கினா்.

கரோனா நோய் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் அதிராம்பட்டினத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தகவல் சேகரிக்க  சுகாதாரத்துறை மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வீட வீடாக சென்று தீவிர கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பின் போது, வீடுகளில் கர்ப்பிணி பெண்கள் உள்ளனரா, பிரசவித்த தாய்மார்கள் இருக்கின்றனரா, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, 60 வயதுக்கு மேல், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து யாராவது தங்கி உள்ளனரா, சர்க்கரை, காசநோய், கேன்சர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் இருக்கின்றனரா, குடும்பத்தில் உள்ள மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை எவ்வளவு, தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு வெளிநபர்கள் வந்து செல்கின்றனரா போன்ற விவரங்களை கேட்டறிந்து அவற்றை ஆவணப்படுத்தி வருகின்றனர்.

மேலும், பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டன. தொடர்ந்து கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும். மருத்துவரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, அதிராம்பட்டினம் பேரூந்து நிலையத்தில் மருத்துவர்கள் திவ்யா, பாலமுருகன், தாரணி, மரியா ஜோஸ்வா, த்ரோஸா ஆகியோர் அடங்கிய நடமாடும் மருத்துவக்குழுவினர், பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கினர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.