Pages

Tuesday, April 28, 2020

பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கல்!

பட்டுக்கோட்டை ஏப்.28-
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் தூய்மைப் பணியாளர்கள் 20 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

திமுகழகத் தலைவரின், அறிவுறுத்தலின்படி தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ மற்றும் ஒன்றியக் கழக செயலாளர் பா.இராமநாதன் வழிகாட்டுதலின்படி பண்ணவயல் மற்றும் கார்காவயல் ஊராட்சியில் சுகாதார பணியாளர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் பார்த்தசாரதி மற்றும் பண்ணவயல் டாக்டர் எஸ்.ஆர்.சந்திரசேகர் தலைமையில், ஒன்றியக் கவுன்சிலர் ஏ.ராஜேந்திரன் முன்னிலை வகித்து நிவாரணம் வழங்கினார்.

இதில் திமுக நிர்வாகிகள் முத்துராசு, கூட்டுறவு சங்க தலைவர் சோமு, அய்யாதுரை, எல்.சி.ராஜேந்திரன், கா.நாடிமுத்து , ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பாஸ்கர்,  பாலத்துரை, சிற்றரசு, சுபாஷ் சந்திரபோஸ், சாமிநாதன், ராஜா மதியழகன், முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...