Pages

Monday, April 27, 2020

நினைவூட்டல்: 'பராமரிப்பாளர் அடையாள அட்டை' விண்ணப்பிக்க அழைப்பு!

அதிரை நியூஸ்: ஏப்.27
ஊரடங்கு காலத்தில் மருத்துவ தேவைக்காக முதியோர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அவர்களை பராமரிப்பாளர்களுக்கு “பராமரிப்பாளர் அடையாள அட்டை” தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நல அலுவலகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது:
கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயத்தை தடுக்கும் விதமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ள காலத்தில் மூத்த குடிமக்களின் நலன்காக்கும் விதமாகவும், முதியோர்களின் இதயநோய், சர்க்கரை நோய், பிஸியோதெரப்பி சிகிச்சை, இரத்த அழுத்தம் போன்ற மருத்துவ உதவிகள் மற்றும் பிற தேவைகளுக்காகவும் முதியோர்களை அழைத்துச் செல்ல ஏதுவாக அவர்களை பராமரிப்பாளர்களுக்கு “பராமரிப்பாளர் அடையாள அட்டை” தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சமூக நல அலுவலகம் மூலமாக வழங்கப்பட உள்ளது.

இந்த அடையாள அட்டையை பெறுவதற்கு பராமரிப்பாளரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, இரண்டு புகைப்படங்கள், தொலைபேசி எண், வாகன எண் ஆகியவற்றுடன் முதியவரின் மருத்துவ ஆவணங்கள், பெயர், வயது, ஆதார் அட்டை மற்றும் பிற அடையாள ஆவணங்களுடன் விண்ணப்பித்து “பராமரிப்பாளர் அடையாள அட்டை” பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...