Pages

Saturday, April 11, 2020

அதிராம்பட்டினத்தில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற சப் கலெக்டர் அறிவுறுத்தல்!

அதிராம்பட்டினம், ஏப்.11
கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிராம்பட்டினம் பொது இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற பட்டுக்கோட்டை சப் கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்ட பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினார். அப்போது, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அருள்பிராகாசம், அதிராம்பட்டினம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜு, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உடன் இருந்தனர்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதத்தில், அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் டிரஸ்ட் நிர்வாகம் சார்பில், கடைத்தெரு மீன் மார்கெட் பிரதான நுழைவு பாதையை தவிர எஞ்சிய அனைத்து பாதைகளும் தடுப்பு வைத்து அடைக்கப்பட்டது.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...