Pages

Monday, May 4, 2020

அதிராம்பட்டினம்: கடந்த 15 நாட்களில் கரோனா தொற்று இல்லாத பகுதியாக மாறியது!

அதிராம்பட்டினம், மே.04
அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த 15 நாள்களாக புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவையாறு, திருவோணம் ஒரத்தநாடு, அதிராம்பட்டினம், அம்மாபேட்டை, தஞ்சாவூர், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 57 நபர்களுக்கு இதுவரை கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வரை உறுதி செய்யப்பட்ட 57 நபர்களில் 41 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில், அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 6 நபர்கள் கடந்த ஏப்.25 ந் தேதியும், 3 நபர்கள் ஏப்.27 ந் தேதியும், 4 நபர்கள் ஏப்.28 ந் தேதியும், 2 நபர்கள் மே.2 ந் தேதியும் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், கடந்த ஏப்.19ந் தேதிக்கு பிறகு கடந்த 15 நாட்களில் அதிராம்பட்டினம் பகுதியில் புதிதாக யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவை அடுத்து, அரசின் சட்டங்களை மதித்து நடத்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்தல், காவல்துறையின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தல், மருத்துவப் பரிசோதனை மேற்கொள்தல் ஆகியவற்றால் இவை சாத்தியமானதாக தெரிவித்தனர்.

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக களப்பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர், சார் ஆட்சியர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினர், காவல் துறையினர், வருவாய்த்துறை அலுவலர்கள், தூய்மைப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரின் பணியைப் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...