Pages

Sunday, May 3, 2020

அதிராம்பட்டினத்தில் தங்கி இருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்கள்: டி.எஸ்.பி ஆய்வு!

அதிராம்பட்டினம், மே.03
கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது தங்கி இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் முழு விவரங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான எண்ணிக்கைகள், அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கு தேவையான வாகன வசதிகள் குறித்த விவரங்களை தயார் செய்து, அவர்களின் ஊர்களுக்கு அனுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்புடைய துறையின் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அரசு உத்தரவு வந்த பிறகு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் சேர்மன் வாடி, வண்டிப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை, மழவேனிற்காடு ஆகிய பகுதிகளில் தங்கி இருக்கும் வெளி மாநிலத் தொழிலாளர்களை, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி சுப்ரமணியன் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...