.

Pages

Friday, May 22, 2020

குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகள்: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: மே.22
தஞ்சாவூர் மற்றும் ஒரத்தநாடு வட்டங்களில் நடைபெற்றுவரும் குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (22.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் வட்டம், வாளமர்கோட்டை கிராமம், கல்லணை கால்வாய் கோட்டத்திற்குட்பட்ட வடசேரி வாய்க்கால் தொலைதூரம் 2 கிமீ முதல் 5.5 கிமீ வரை மதகுகள் மற்றும் சறுக்கை புனரமைக்கும் பணி மாண்புமிகு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூபாய் 55 லட்சம் மதிப்பீட்டில் வடசேரி வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கம் சார்பில் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு தண்ணீர் வருவதற்குள் பணிகளை விரைந்து முடிக்கவும், கரைகளை அகலப்படுத்திடவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வாளமர்கோட்டையில் வயல்வெளியில் நடந்து சென்று மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாசன வாய்க்கால் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு பணிபுரிந்த பணியாளர்களிடம் பெயர், காலையில் வருகை தந்த நேரம், பணிக்காக அளந்து கொடுக்கப்பட்ட விவரம் ஆகியவை குறித்து கேட்டறிந்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணியாற்றிய பணியாளர்களிடமிருந்து மண்வெட்டியை வாங்கி சிறிது தூரம் வாய்க்காலை சீர்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கொண்டார்.

மேலும், வாளமர்கோட்டை ஊராட்சியில் உளுந்து பயிர் பயிரிடப்பட்டுள்ளதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உளுந்து பயிர் பயிரிடப்பட்டுள்ள மொத்த பரப்பளவு, அறுவடைக் காலம் ஆகியவை குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குனரிடம் கேட்டறிந்து, தேவையான உரம் கையிருப்பு வைத்திடவும், தடையின்றி விநியோகம் செய்திடவும் அறிவுறுத்தினார்.

பின்னர், தஞ்சாவூர் வட்டம், காட்டூர் கிராமத்தில் குலமங்கலம் மெயின் வாய்க்கால் 0 கிமீ முதல் 10.22 கிமீ வரை, குலமங்கலம் மூன்றாம் எண் வாய்க்கால் 0 கிமீ முதல் 3 கிமீ வரை, கல்யாண ஓடை பிரிவு நான்காம் எண் வாய்க்கால் 0 கிமீ முதல் 2.7 கிமீ வரை தூர்வாரும் பணி பொதுப்பணித்துறை மூலம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, காட்டூர் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் நடைபெற்றுவரும் வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, தென்னமநாடு ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் கல்யாண ஓடை பிரதான கால்வாய் தொலைதூரம் 13 கிமீ முதல் 15 கிமீ வரை மற்றும் 17.62 கிமீ முதல் 18.85 கிமீ வரை,  கல்யாண ஓடை கிளை வாய்க்கால் எண் - 4-95 தொலைதூரம் 0 கிமீ முதல் 1.50 கிமீ வரை, கல்யாண ஓடை கிளை வாய்க்கால் எண் - 6-7 தொலைதூரம் 0 கிமீ முதல் 0.550 கிமீ வரை, கல்யாண ஓடை கிளை வாய்க்கால் எண் - 10-12 தொலைதூரம் 0 கிமீ முதல் 0.6 கிமீ வரை, கல்யாண ஓடை கிளை வாய்க்கால் எண் - 12-14 தொலைதூரம் 0 கிமீ முதல் 1.39 கிமீ வரை, கல்யாண ஓடை கிளை வாய்க்கால் எண் - 11-13 தொலைதூரம் 0 கிமீ முதல் 3.60 கிமீ வரை ஆகிய பணிகள் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதையும், குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித் துறை மூலம் தென்னமநாடு அம்மணிகுளம், வண்ணான்குளம் தூர்வாரப்படுவதையும் பார்வையிட்டு ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் வரத்து வாய்க்கால் மற்றும் தண்ணீர் வெளியேறும் வாய்க்காலினை முறையாக தூர்வாரிடுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், குளத்தின் வெளிப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு கரையை பலப்படுத்திடுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

குடிமராமத்து மற்றும் தூர்வாரும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், அடிக்கடி கைகழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, அப்பகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீரை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ராமசாமி, கல்லணை கால்வாய் கோட்ட உதவி செயற்பொறியாளர் சண்முகவேலு மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.