Pages

Tuesday, May 5, 2020

தஞ்சை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை எவை... எவை? (முழு விவரம்)

அதிரை நியூஸ்: மே.05
தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவைகளில் அதிராம்பட்டினம், திருவையாறு பேரூராட்சி, பாபநாசம் பேரூராட்சி, கும்பகோணம் நகராட்சி, ஒரத்தநாடு நெய்வாசல் ஊராட்சி, தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட கே.எம்.எஸ் நகர், வல்லம் பேரூராட்சி, பேராவூரணி, பாபநாசம் திருவைகாவூர் ஆகிய பகுதிகளில் நோய்த்தொற்று உள்ளோரின் வீட்டிலிருந்து அதை சுற்றியுள்ள ஐந்து கிலோமீட்டர் மற்றும் மேலும் இரண்டு கிலோ மீட்டர் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக பார்க்கப்படுகிறது. இந்தப் பகுதிகளில் மே 17 வரை தற்போது உள்ள நிலையே தொடரும். எந்த ஒரு தளர்வும் கிடையாது. இந்தப் பகுதிகளில் எந்த ஒரு வாகன போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் வீட்டிற்கே நேரடியாக சென்று வழங்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தொடர்ந்து 28 நாட்கள் புதிய தொற்று கண்டறியாமல் இருந்தால் அந்தப் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலிருந்து தளர்வு கொடுக்க வாய்ப்புள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதுபோல் தொடர்ந்து வழங்க வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் தற்போது சிவப்பு மண்டலத்தில் உள்ளது. தொடர்ந்து, 21 நாட்கள் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படாத பட்சத்தில், சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறமுடியும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...