.

Pages

Saturday, May 30, 2020

மறைந்த 'தமிழ்மாமணி' அதிரை அஹ்மத் பற்றிய சிறு குறிப்பு!

அதிரை நியூஸ்: மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அதிரை அஹ்மத் (வயது 72). தமிழ் இலக்கியங்கள் மீது அதிக பற்று கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், சமூக ஆர்வலர் ஆவார். முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரியில் சில ஆண்டுகள் முதல்வராக பொறுப்பேற்று இஸ்லாமிய மார்க்க கல்வியை போதித்தவர். அனைவராலும் 'தமிழ்அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவர்.

அதிரையின் மூத்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இஸ்லாம் ஓர் அறிமுகம், இஸ்லாமிய இலக்கியச் சிந்தனை, மழைப்பாட்டு (உரை), Wisdom in the Dawn (English), இளமைப் பருவத்திலே (Wisdom in the Dawn  என்ற நூலின் மொழிபெயர்ப்பு), ஆயிஷாவின் சிறுமிப் பாட்டு (சிறுவர் மரபுக் கவிதைகள்), அரும்புப் பாட்டு (பதிப்பில்), பெண்மணி மாலை (மரபுக் கவிதைகள்), ஒருமைப் பாட்டு (மரபுக் கவிதைகள்), இறையருட்கவிமணி மாலை (மரபுக் கவிதைகள்), அருமையான வாழ்வும் அமைதியான இறப்பும், ஏசுவை நேசித்தேன் பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் -1, பேறு பெற்ற பெண்மணிகள் பாகம் – 2,நபி வரலாறு, நம் பிள்ளைகளுக்கு,  நபி வரலாறு (விரிவு), சல்மான் அல் ஃபாரிஸி (மொழிபெயர்ப்பு), அலீ பின் அபீதாலிபு,கப்பாப் இப்னுல் அறத்து (மொழிபெயர்ப்பு), அபூதர் அல்ஃகிஃபாரி. மிக்தாத் இப்னுல் அஸ்வத் (மொழிபெயர்ப்பு), இறைத்தூதர் முஹம்மத், வட்டியை ஒழிப்போம்! (மொழிபெயர்ப்பு), அண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் (இலக்கியச் சோலை), தொழுகையாளிகளே! (மொழிபெயர்ப்பு - மூலம்: அரபி), மொட்டுகளே மலருங்கள்! , கவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை, நல்ல தமிழ் எழுதுவோம்!, ஈமான் – இஸ்லாம் கவி மலர்கள், நபி (ஸல்) வரலாறு, பேருபெற்ற பெண்மணிகள், மரபுக்கவிதைகள் உட்பட மொத்தம் 35 நூல்களை எழுதி உள்ளார்.

அதிரை சமுதாய நல மன்றம் – பத்தாம் ஆண்டு சிறப்பு மலர், ‘பிறை’ பத்திரிகை சார்பில் ‘அதிரை செக்கடிப் பள்ளி’ திறப்பு விழா மலர்,‘வேலூர் பாகியாத்துஸ் சாலிஹாத்’ நூற்றாண்டு விழா மலர், ‘சீறாப்புராணம்’ – நாச்சிகுளத்தார் வெளியீடு, அதிரை ஜீவரத்ன கவிராஜரின் ‘மழைப்பாட்டு’,.     ‘அல்லாமா அப்துல் வஹ்ஹாப்’ நினைவு மலர், முத்துப்பேட்டை ‘அல் மஹா மலர்கள்’ ஆகியவற்றை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் பல்வேறு தமிழ் இலக்கிய மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். மேலும் மரபுக்கவிதை பலவற்றையும் எழுதி உள்ளார். பல நூல்களுக்கு வாழ்த்துரை வழங்கி உள்ளார்.

அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி கவிஞர் முடியரசன் தலைமைமையில் கவியரங்கம், சென்னை காயிதே மில்லத் அரங்கு மீலாதுக் கவியரங்கம், ‘கவிக்கோ’ தலைமையில் ‘பொதிகை’ தொலைக்காட்சியில் ‘ரமழான்’ கவியரங்கு, 1972 – முதலாம் இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாடு, திருச்சி, 2007 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் ஏழாவது மாநாடு, சென்னை,  2010 -  இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் 15 வது மாநாடு, அதிரை, 2011 -  இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் எட்டாவது மாநாடு, காயல்பட்டினம்  ஆகிய கருத்தரங்குகள், மாநாடுகளில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

காரைக்கால் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு பாபநாசத்தில் நடந்த மாநாட்டில், தமிழ் இலக்கியச் சேவைக்காக, அதிராம்பட்டினம் தமிழ்அறிஞர் அதிரை அஹமத் அவர்கட்கு 'தமிழ்மாமணி' விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இவரது எழுத்துச்சேவையைப் பாராட்டி, அதிராம்பட்டினம் சமூக நல அறக்கட்டளை மற்றும் அதிரை நியூஸ் இணையதள ஊடகம், கடந்த 2015 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினத்தில் நடத்திய கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழாவில், சிறந்த எழுத்தாளருக்கான விருதினை, தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் குணசீலன் வழங்கி பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சேக்கனா எம். நிஜாமுதீன்
(ஆசிரியர், அதிரை நியூஸ்)

7 comments:

 1. என் ஆசான் அதிரை அஹ்மத் மறைவை ஒட்டி என் இரங்கற்பா

  உளம்நிறை அன்பு தந்து
  உயர்நிறை கல்வி தந்து
  வளம்நிறை மார்க்கம் காட்டி
  வழிநடத் தியவென் ஆசான்
  தளம்பல எழுத்தால் நின்று
  தமிழரின் உள்ளம் வென்று
  களம்பல கண்ட நீங்கள்
  காலமும் முடிந்து சென்றீர்!

  அன்புடன்
  மாணவன்
  *கவியன்பன் கலாம்*

  ReplyDelete
 2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

  ReplyDelete
 3. நம் சமுதாயத்தில் பன்முக திறமை கொண்டவர்களை அடையாளம் காண்பது அரிது, ஒரு சிலர் இருந்தாலும் அவர்களின் திறமைகள் பாராட்ட தவறவிடுகிறோம் பின்னர் சாதனைகளை நினைத்து பெருமை கொள்ளும் மக்களாக இருக்கிறோம், 35க்கு மேற்பட்ட படைப்புகளை தந்திருக்கும் ஒரு மூத்த அறிஞரை நாம் இழந்திருப்பது தமிழ் இலக்கிய குடும்பத்துக்கு பேரிழப்பு.

  தமிழ் அறிஞரின் சாதனைகளை ஒரு நாள் செய்தி என்று கடந்திடாமல், அவர்களின் பொக்கிஷங்களை நம் வருங்கால சந்ததியினர் அறிந்திட இஸ்லாமிய நூலகம் அமைத்திட நாம் முன்வரவேண்டும்.

  அதிரை அஹமது அவர்களின் மறுமை வாழ்விற்கு நாம் துவா செய்வோமாக - ஆமீன்.

  ReplyDelete
 4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon

  ReplyDelete
 5. அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம் உயர்வானது


  அதிரை அஹ்மது
  முகநூல் நன்பர்கள் ' வழியே எனக்குக் கிடைத்த அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள்.கிடைத்த அறிமுகம் உயர்வானது
  அதிரை அஹ்மது அண்ணன் அவர்கள் நிறை ஞானம்.பெற்றவர்

  அதிரை அஹ்மது அவர்களது முகநூல் பக்கத்தில் உள்ள படம்
  அவர்கள் எழுதிய புத்தகங்கள் நிறைவாகவே இருக்கும்


  அறிமுகமான தருணத்திலிருந்தே அவர்களுக்கு என் மீது அப்படியோர் அன்பு, பாசம். வயதிலும் அறிவிலும் பக்குவத்திலும் பழுத்த அவர்கள் என்னிடம் பட்டுக்கோட்டை சந்திப்பின்போது பழகும்போது வெளிப்படுத்திய அண்ணன் அபிமானத்தில் நான் மகிழ்ந்து போனேன் அதிரை அஹ்மது அண்ணன் அவர்களின் எனக்குக் கிடைத்த பேறு.

  தமிழ் மாமணி பட்டம் பெற்ற அவர்கள் எழுதிக் குவித்த நூல்கள் பல. அவர்களுடைய அண்மைய master piece -
  அவர்கள் . தம்மைப் படைத்தவனிடம் மீண்டார்கள் தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.

  இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.  அன்பான பேச்சும் பரிவும் அக்கறையும் கொண்டிருந்த அண்ணனை நிரந்தரமாக இழந்து விட்டதை நினைக்கும்போது துக்கம் பீறிட்டு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

  அவர்களுடைய குறைபாடுகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக்கி, மிக உயர்ந்த பதவியை அளித்தருள ஏக இறைவனிடம் கையேந்துகிறேன்.

  தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.அவர்களை பட்டுக்கோட்டையில் அன்புடன் புகாரி மகனாரின் திருமண வரவேற்பு நிகழ்வில் சந்தித்து வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தேன் .அவர்கள் மிகவும் அமைதியாக என்னுடன் பேசியதனை என்னால் மறக்க முடியாது .அவர்களோடு படமும் எடுத்துக் கொண்டேன் .
  அவர்கள் இறைவசம் சேர்ந்த செய்தி அதிர்ச்சியாக உள்ளது
  அவர்கள் எழுதிய கட்டுரைகள் எனது
  https://nidurseasons.blogspot.com/ உள்ளது

  தமிழ் மாமணி அதிரை அஹ்மது காக்கா.அவர்களுடைய குறைபாடுகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்க்கையையும் மறுமை வாழ்க்கையையும் சிறப்பாக்கி, மிக உயர்ந்த பதவியை அளித்தருள ஏக இறைவனிடம் கையேந்துகிறேன்.
  பாசத்துடன்
  https://nidurseasons.blogspot.com/2020/05/blog-post_40.html

  ReplyDelete
 6. https://nidurseasons.blogspot.com/2020/05/blog-post_78.html

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.