Pages

Wednesday, July 15, 2020

'டாக்டராகி சேவையாற்றுவது எனது லட்சியம்': அமீரகத்தில் CBSE +2 தேர்வில் முதலிடம் பிடித்த அதிரை மாணவி (வீடியோ)

சாதனை மாணவி இஃப்ரத் தனது தந்தை கலீலுர் ரஹ்மான்
அதிரை நியூஸ்: ஜூலை 15
'சிறந்த டாக்டராகி பொதுமக்களுக்கு சேவையாற்றுவது எனது லட்சியம்' என்றார் அமீரகத்தில் CBSE +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த அதிரை மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் கலீலுர் ரஹ்மான். இவர் குடும்பத்துடன்  துபையில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் இஃப்ரத். துபையில் உள்ள Our Own English High School ல் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் 12 ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று வெளியான பொதுத்தேர்வு முடிவில், 500 க்கு 475 மதிப்பெண்கள் பெற்று 95 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இவர் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுகளில் 100 க்கு தலா 95 மதிப்பெண்ணும், பயாலஜி பாடத்தில் 100 க்கு 99 மதிப்பெண்ணும், ஹோம் சயின்ஸ் பாடத்தில் 100 க்கு 97 மதிப்பெண்ணும் பெற்று பள்ளி அளவிலும், ஐக்கிய அரபு அமீரக கல்வி நிலையங்கள் அளவிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

சாதனை குறித்து மாணவி இஃப்ரத் கலீலுர் ரஹ்மான் கூறியது (வீடியோ இணைப்பு)

7 comments:

  1. மாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. Maasha Allah... May Almighty Allah fulfill her wish of becoming doctor and serve the society... My both sons studied in Dubai and now studying Medicine...as per their wish..

    ReplyDelete
  4. மாஷாஅல்லாஹ்

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்.. வாழ்த்துகள்..💐 இவரின் நோக்கம் நிறைவேற பிரார்த்திப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...