Pages

Sunday, August 2, 2020

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.5 கோடியில் மருத்துவ வசதி: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக. 02
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள மருத்துவ வசதிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (02.08.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 1.5 கோடி மதிப்பீட்டில் கரோனா நோயாளிகள் பயன்பெறும் வகையில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள 100 படுக்கை வசதிகளையும், மனநல சிகிச்சை பிரிவு மற்றும் தோல்நோய் சிகிச்சை பிரிவு ஆகிய கட்டிடங்கள் புதிதாக புனரமைக்கப்பட்டு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அவசர சிகிச்சை பிரிவு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடியவகையில் 2 புதிய வென்டிலேட்டர் வசதிகளுடன் 20 ஆக்சிசன் இணைப்புகளுடன் கூடிய 20 படுக்கை வசதிகளும், கொரோனா ஆள்கவன மருத்துவப் பிரிவு, ஹைஃப்லோ நோவல் ஆக்சிசன் வசதியுடன் 30 படுக்கைகளும், புதிதாக 15 வென்டிலேட்டர் வசதிகளும் தயார் நிலையில் உள்ளதை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டறிந்தார்.

மேலும், ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் எக்ஸ்ரே கருவி, 8 லட்சம் மதிப்பீட்டில் உயிர் வேதியல் பரிசோதனை மையம், 10 லட்சம் மதிப்பீட்டில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இவ்வாய்வின் போது தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர்(பொ) டாக்டர் மருததுரை, முன்னாள் முதல்வர் டாக்டர் சிங்காரவேலு, நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வம், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...