Pages

Tuesday, August 4, 2020

பட்டுக்கோட்டையில் இன்று (ஆக.4) முதல் மாலை 5 மணிக்கு கடைகள் மூடல்!

பட்டுக்கோட்டை, ஆக.04
பட்டுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை (ஆக.4) முதல் அனைத்து வணிக நிறுவனங்களும் மாலை 5 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர வர்த்தக சங்கக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ராமானுஜம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்,  தமிழக அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில், பட்டுக்கோட்டை நகரில் ஆக. 4-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை அனைத்து வணிக நிறுவனங்களும் காலை 6 மணிக்கு திறந்து, மாலை 5 மணிக்கு மூடுவது, உணவகங்கள் காலை 6 மணிக்கு திறந்து, இரவு 7 மணிக்கு மூடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...