Pages

Tuesday, August 4, 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இணையவழி கண்டன ஆர்ப்பாட்டம்!

அதிராம்பட்டினம், ஆக.04
காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில், இணையவழி கண்டன ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினம் பழைய அஞ்சலகச் சாலை, கடைத்தெரு ஆகிய பகுதிகளில் திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் எச்.சபி அகமது, எஸ்.டி.பிஐ கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் என்.முகமது புகாரி, அதிரை பேரூர் தலைவர் எஸ்.அகமது அஸ்லம், செயலாளர் எஸ்.எம் சாகுல் ஹமீது, பொருளாளர் என்.எம் சேக்தாவுது, இணைச் செயலாளர் சி.அகமது. செயற்குழு உறுப்பினர் எஸ். ஜர்ஜிஸ் உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, தென்காசி விவசாயி முத்து படுகொலை, ராணிப் பேட்டையில் இளம்பெண் மீது நடத்திய தாக்குதல், சாத்தான் குளம் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியவாறு முழக்கமிட்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...