.

Pages

Monday, August 10, 2020

அன்பும், பணிவும் கொண்டவர் ஹாஜி LMS கமால் பாட்சா மரைக்காயர்: பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர்!

அதிரை நியூஸ்: ஆக.10
அன்புச்சகோதரர் ஹாஜி கமால் பாட்சா மரைக்காயர் அவர்கள் 10 நாட்களுக்கும் அதிகமாக தஞ்சை மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்பட்டு இன்று (10-08-2020) திங்களன்று வஃபாத்தாகி விட்டார் என்ற செய்தி அவரை வீட வயதில் மூத்தவர்களான என் போன்றோருக்கும், அவருடைய வயதை ஒத்த நண்பர்கள், குடும்பத்தவர்கள் அனைவருக்கும் பல்வேறு மரணச் செய்திகளுக்கிடையில் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துவிட்டது.

தகுதிவாய்ந்த மரைக்காயர் குடும்பத்திலே பிறந்தாலும் தனக்கே உரிய அடக்கத்துடனும், பணிவுடனும் குடும்பத்தினருடனும், நண்பர்கள் வட்டத்திலும் மிகக்கனிவுடன், அன்புடனும் பழகிய நல்ல மனிதர். வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத தர்மம், குடும்ப உறுப்பினர்களை கவனித்துக்கொள்வது, அறிந்தவர், அறியாதவர், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் விருந்து உபசரணை செய்து, எல்லோர் உள்ளத்திலும் குடிகொண்டவர் ஹாஜி கமால் பாட்சா.

மரைக்காயர் குடும்பத்தில் தோப்பில் உள்ள தென்னை மரங்களை மட்டுமே நம்பி பிறரைப்போல ஊரிலேயே தங்கி விடாமல், மிக இளம் வயதில் அயல் நாட்டுப் பயணம் மேற்கொண்டு சில காலம் மட்டுமே தொழிலாளியாகப் பணியாற்றி அடுத்து சில ஆண்டுகளில் சொந்தமாக வணிக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி நேர்மையாகவும், பிறருக்கு உதவியாகவும் வணிகம் செய்து நிறைந்த பொருளீட்டி, ஈட்டிய செல்வத்தில் ஆடம்பரம் இன்றி தனது குடும்பத்தினரையும், உற்றார் ~ உறவினர்களையும், வெளியே காட்டிக்கொள்ளாத உதவிகளால் அவர்களை மனம் மகிழச்செய்தவர்.

என்னைவிட 4 வயது இளையவரான ஹாஜி கமால் பாட்சா எனக்கும் நண்பர், என் தம்பிக்கும் நண்பர். இப்படி அவர் பலரையும் கவர்ந்திழுக்கக் காரணம் பணிவும், மென்மையான பேச்சும், அன்பாக பழகும் முறையும், விருந்து உபசரிக்கும் விதமேயாகும். சவுதி அரேபியாவிலேயே இவருக்குத் தொழில் அமைந்ததில் 5 க்கும் அதிகமாக ஹஜ்ஜுப் பயணங்களை தனக்காகவும், தனது பெற்றோர் உறவினர்களுக்காவும் செய்தவர்.

பிறரைப்போல தானும் ஒரு ஹஜ்ஜுப் பயணியாக மக்கா மதீனாவில் இருக்கும் போதெல்லாம் இங்கிருந்து செல்லும் ஹாஜிகளுக்கு அதிகம் அதிகமான உதவிகளைச் செய்து தருபவர்.

சகோதரர் ஹாஜி கமால் பாட்சா அவர்களின் மரணத்தை வல்ல அல்லாஹ் ஃபீசபில் மவுத்தாக ஏற்று, ஷஹீதுகளின் தரஜாவை வழங்கி ஜன்னத்துல் பிர்தவுஸ் எண்ணும் சுவர்க்கத்தை வழங்குவானாக ஆமீன்!

கனத்த மனதுடனும், நீர் சிந்தும் கண்களுடனும்.....
பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர்
அதிராம்பட்டினம்

5 comments:

 1. Assalamualaikum... very heavy heartedly I am sharing my grief over MARHUM'Kamal batcha maraikka...we were neighbouring family past 4 decades in pudumanai Street...he was a man of simplicity.... poor man's hope and his sons are Social workers to the weaker sections of adirampattinam and more...I am very sad to hear that he is no more...we always remember his family ��.. Inshaallah Allah bless �� his family and friends... May Allah give him the highest place in JANNATUL FERDOUS... Aameen

  ReplyDelete
 2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ....கும்பகோணம் A.முகம்மது இக்பால்

  ReplyDelete
 4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.