Pages

Friday, September 11, 2020

தஞ்சை மாவட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!


அதிரை நியூஸ்: செப்.11
தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

காணொளிக்காட்சி கூட்டத்தில் தனியார் மருத்துவமனை நிர்வாகிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது :-
உலகளாவிய நோய்த்தொற்றாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் சிடி ஸ்கேன் அறிக்கை மூலம் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவர்களின் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், மருத்துவப் பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கும் தெரிவிக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று அறிகுறியுடன் உள்ள நோயாளிகள் கண்டறியப்பட்டால், அவர்களின் விவரங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைத்திட வேண்டும். தஞ்சாவூரிலுள்ள எம்விகே மற்றும் வினோதகன் மருத்துவமனைகள் தாமாக முன்வந்து கொரோனா நோய்த்தொற்றுக்கான சிகிச்சை அளிக்க அனுமதி கோரியதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், கொரோனா நோய்த்தொற்று சிகிச்சை அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகள் மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிடும் இந்திய மருத்துவ கழக உறுப்பினர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் டாக்டர்.ராமு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) டாக்டர் மருதுதுரை சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர்.ரவீந்திரன் அரசு மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...