Pages

Tuesday, September 29, 2020

தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கரோனா பரிசோதனை ~ அபராதம் விதிக்கப்படும்: ஆட்சியர் எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: செப்.29
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரத்திலும் கண்காணிப்பு அலுவலர்களாக மாவட்ட நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் அச்சப்படாமல்ää அரசின் வழிகாட்டுதல்களையும் மருத்துவர்களின் அறிவுரைகளையும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். அறிகுறி இல்லாமல் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் தங்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மூன்று கொரோனா சிகிச்சை மையங்களில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 87 சதவீத நபர்கள் கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அனைவரும் முககவசம் அணிவதன் மூலம் கொரோனா பரவுதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத காரணத்திற்காக இதுவரை 8945 நபர்களிடமிருந்து ரூபாய் 19.32 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தாலும், ஆங்காங்கே சில நபர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்துள்ளது. பிறரிடம் பேசும்போது முகக்கவசத்தை இறக்கி விட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம்  அணிவதை இயல்பு வாழ்க்கையின் ஒரு பகுதியாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டும் மற்றும் காவல்துறை மூலம் வழக்கு பதிவு செய்யப்படும். அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும். எனவேää பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...