.

Pages

Thursday, October 15, 2020

ராஜாமடம் அண்ணா பல்கலைகழக பொறியியல் கல்லூரி முன்பாக திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.15
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி முன்பாக திமுக இளைஞரணி மற்றும் மாணவரணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைகழக உறுப்பு பொறியியல் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சன் இராமநாதன், மாணவரணி அமைப்பாளர் எஸ்.ஆர்.எஸ் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த திமுக இளைஞரணியினர் மற்றும் மாணவரணியினர் திரளானோர் கலந்து கொண்டு, மத்திய அரசைக் கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, திமுக பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் சத்திய விஜயன், பார்த்திபன், பா.இராமநாதன், லண்டன் கோவிந்தராஜ், முருகானந்தம், அன்பழகன், முத்துமாணிக்கம், ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை நகர பொறுப்பாளர் செந்தில் குமார், அதிராம்பட்டினம் பேரூர் செயலளார் இராம குணசேகரன், ஒன்றிய பெருந்தலைவர் பழனிவேலு, துணைத்தலைவர் ராஜா, தஞ்சை தெற்கு மாவட்ட கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவை  அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம், அதிரை பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம், இராஜமடம் இளங்கோ, பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் வீரமணி, ரமேஷ், அதிராம்பட்டினம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் அதிரை மைதீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

அதிராம்பட்டினம் பேரூர்...
எம்.எம்.எஸ் அப்துல் கரீம், என்.கே.எஸ் சபீர், கோடி முதலி, ஏ.எம்.ஒய் அன்சர்கான், சி.தில்லைநாதன், இன்பநாதன், எம்.பகுருதீன், முல்லை ஆர்.மதி, ஏ.எம் அப்துல் ஹலீம், வீரப்பன், கே. இத்ரீஸ் அகமது, முன்னாள் கவுன்சிலர்கள் எச்.முகமது இப்ராஹீம், என்.கே.எஸ் முகமது சரீப், அய்யாவு, கோடி நாகராஜ், டி.முத்துராமன், சைபுதீன், நிஜாமுதீன், இ.வாப்பு மரைக்காயர், பிரின்ஸ் முகமது ராவுத்தர், எம்.அன்வர்தீன், வீரசேகரன், இராமநாதன், ஏ.வி.எம் வரிசை முகமது, கதிர், நாசர், கிருபா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மனிதநேய மக்கள் கட்சியினர் பங்கேற்பு:
இந்த ஆர்ப்பாட்டத்தை ஆதரித்து, மனிதநேய மக்கள் கட்சி அதிராம்பட்டினம் பேரூர் சார்பில், எஸ்.ஏ இத்ரீஸ் அகமது, எஸ்.அஸ்லம், நியாஸ் அகமது, எச்.செய்யது புஹாரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.