.

Pages

Sunday, November 29, 2020

அதிராம்பட்டினத்தில் பெண் பயனாளி இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கல்!

அதிராம்பட்டினம், நவ.29
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், வாழ்வாதார உதவியாக ஆதரவற்ற பெண் பயனாளி இருவருக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வு அவ்வமைப்பின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு, அவ்வமைப்பின் தலைவர் பேராசிரியர் எஸ்.பர்கத் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் செயலர் எஸ்.ஏ அப்துல் ஹமீது, பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், ஆதரவற்ற அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த பெண் பயனாளி இருவருக்கு, கடற்கரைத்தெருவைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் அளித்த நிதியில், ரூ.14 ஆயிரம் மதிப்பிலான நாற்காலியுடன் கூடிய தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் ஏ.எஸ் அகமது ஜலீல், ஓ.சாகுல் ஹமீது, எச் முகமது இப்ராஹிம், முகமது முகைதீன், எம்.நிஜாமுதீன், முகமது புஹாரி, டி.ஏ அகமது அனஸ். உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Friday, November 27, 2020

மரண அறிவிப்பு ~ எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)

அதிரை நியூஸ்: நவ.27
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மர்ஹும் எம்.எம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.ஏ.சி முத்து மரைக்காயர், மர்ஹும் எம்.ஏ.சி நெய்னா முகமது, மர்ஹும் ஹாஜி எம்.ஏ.சி பக்கீர் முகமது ஆகியோரின் மருமகனும், கே. அகமது ரிதாவுதீன் அவர்களின் மாமனாரும், எம்.ஏ.சி செய்யது இப்ராஹிம், மர்ஹும் எம்.ஏ.சி நசீர் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய எம்.ஐ அப்துல் மஜீது (வயது 70)  அவர்கள் இன்று காலை சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (28-11-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Thursday, November 26, 2020

தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடரும்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.26
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் எந்த பாதிப்பும் இல்லை இருப்பினும் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் நிவர் புயல் மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆகியோர் இன்று (26.11.2020) செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:        
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக 122 நிவாரண முகாம்களில் 1606 குடும்பங்கள், 1761 ஆண்கள், 2261 பெண்கள், 1344 குழந்தைகள் மொத்ததம் 5321 மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவழக்கைக்காக மாவட்டத்தில் 42 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மனித உயிரி உயிரிழப்பு ஏதுமில்லை. மாவட்ட சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் பாதிக்கப்படவில்லை. போக்குவரத்து ஏதும் தடைபெறவில்லை. மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக 20 மின்கம்பங்கள் சேைந்துள்ளன. மின்கம்ப சேதங்கள் சரி செய்யப்பட்டு மின் இணைப்பபு மீள வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில எழு இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. அவை அனைத்தும் அப்புறப்படுத்தபட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 34 கூரை வீடுகள் பகுதியாகவும், 1 கூரை வீடு முழுமையாகவும், ஓட்டு வீடுகளில் 1 பகுதியாக சேதமடைந்துள்ளது. கால்நடைகளில் 1 மாடு, 2 ஆடுகள் மழையினால் இறந்ததாக தகவல் வரப்பெற்றுள்ளது. உறுதி செய்யப்பட வேண்டும். வருவாய்த்துறை. ஊரகவளர்ச்சித்துறை, காவல்துறை, மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை, மருத்துவத்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, தேசிய நெடுஞ்சாலைத்துறை, மீன்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை மற்றும் இதர துறைகள் அலுவலர்கள் நிவர் புயல் அவசரப் பணிக்களுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மீட்பு பணிக்காக தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டியிருந்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 26-11-2020 அன்று மழை அளவு 38.04 மி.மீ (தஞ்சாவூர் மாவட்டத்தின் ஆண்டு சராசாரி மழை அளவு 1098.24 மிமீ), மேலும், மாவட்ட கட்டுப்பாட்டு அறை, கோட்ட அலுவலகங்கள் மற்றும் அனைத்து வட்ட அலுவலகங்களிலும் 24*7 கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் கோட்ட அளவில் 3 கண்காணிப்பு அலுவலர்களும், சார் ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் வட்ட அளவில் 9 மண்டல அலுவலர்களும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரண நடவடிக்கைக்காகவும் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ள தடுப்பு பணிக்களுக்காக 41 இடங்களில் 1,06,600 மணல் மூட்டைகளும். 8269 சவுக்கு கட்டைகளும், 2,10,350 காலிசாக்கு பைகளும் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. மாவட்டத்தில் 3000 மின்கம்பங்கள் மின்வாரியத்தால் இருப்பு வைக்கப்பட்டன. 552 மரம் அறுக்கும் கருவிகள், 205 ஜேசிபி, 173 Genset கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

மாவட்டத்தில் கண்டறியப்பட்ட 251 நிவாரண முகாம்களில் மண்டல அலுவலர்கள் மூலமாக அழப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு உறுதி டிசய்யப்பட்டது. 16 மருத்துவ முகாம்கள் மூலமாக நிவாரண முகாம்கள் ஆய்வு செய்யப்பட்டு COVID மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.108 ஆம்புலன்ஸ்கள், 29 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்ழயிருந்தன. நிவர் புயல் தொடர்பாக 49 புகார் மனுக்கள் பெறப்பட்டதில் 48 மனுக்கள் தீர்வு காணப்பட்டன. 1 மனு நடவடிக்கையில் உள்ளது.

மாவட்டத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட மின் துண்டிப்பு துரிதமாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நிவர் புயல் காரணமாக விழுந்த மரங்களை அகற்றும் பணி தொடர்புடைய துறைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள நீர் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களால் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் விவசாய பெருங்குடி மக்கள் பயிர் காப்பீடு தொகையை டிசம்பர் 15 வரை செலுத்தலாம்.மழைääபுயல் சேதம் இல்லை என்று பொறுமை காத்திராமல் உடனடியாக அனைத்து பயிர்களுக்கும் பயிர்க்காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.மேலும் மாவட்டத்தில் உள்ள மொத்த ஏரி குளங்கள் 618 இதில் 174 ஏரி குளங்கள் முழுவதும் நிரம்பி உள்ளன 199 குளங்கள் 75% முதல் 100மூ வரை நிரம்பியுள்ளன, 135 ஏரி குளங்கள் 50% முதல் 75%  வரை நிரம்பியுள்ளனää83 குளங்கள் 25%  முதல் 50% வரை நிரம்பியுள்ளன, 27 குளங்கள் 25% மேல் நிறைந்துள்ளன மேலும் தமிழக அரசின் உத்தரவின்படி இன்று மதியம் முதல் தஞ்சாவூர் மாவட்டம் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும்

டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை இருக்குமென்பதால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் மழை புயல் சேதம் தொடர்பாக புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம்.  

மேலும், புயல் மழை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு நல்கி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பத்திரிக்கைத்துறையினருக்கும், தொலைக்காட்சித்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தில் 23.40 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.26
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான அதி தீவிர நிவர் புயலானது தமிழகம் ~ புதுச்சேரிக்கு இடையே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று காலை 2.30 மணி வரை கரையைக் கடந்தது.

இந்நிலையில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (26-11-2020) வியாழக்கிழமை காலை 7 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 23.40 மி.மீ, மதுக்கூர் 37.80 மி.மீ, பட்டுக்கோட்டை 31 மி.மீ, பேராவூரணி 12.80, ஒரத்தநாடு 23.80, தஞ்சாவூர் 38, வல்லம் 34, திருவையாறு 40, பூதலூர் 28.80, திருக்காட்டுப்பள்ளி 18.60, நெய்வாசல் தென்பாதி 46.20, வெட்டிக்காடு 38, திருவிடைமருதூர் 49.80, கும்பகோணம் 59, பாபநாசம் 51.40, அய்யம்பேட்டை 41 மி.மீ மழை பதிவாகியது.

Wednesday, November 25, 2020

அதிராம்பட்டினத்தில் 5.11 மி.மீ மழை பதிவு!

அதிராம்பட்டினம், நவ.25
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் புதன்கிழமை காலை குளிர்ந்த காற்றுடன் பெய்த மழை சிறிது இடைவெளி விட்டு மீண்டும் இரவு முதல் மழை பெய்து வருகிறது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில், இன்று (25-11-2020) புதன்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி, அதிராம்பட்டினம் 5.11 மி.மீ, மதுக்கூர் 6.10 மி.மீ, பட்டுக்கோட்டை 8.10 மி.மீ,  ஒரத்தநாடு 9, தஞ்சாவூர் 14.20, வல்லம் 6, திருவையாறு 8, பூதலூர் 4.40, திருக்காட்டுப்பள்ளி 8.60, நெய்வாசல் தென்பாதி 14.20, வெட்டிக்காடு 10.20, திருவிடைமருதூர் 16.90, கும்பகோணம் 18, பாபநாசம் 20.40, அய்யம்பேட்டை 21 மி.மீ மழை பதிவாகியது.

மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில் புயல் முன்னெச்சரிக்கை கண்காணிப்பு அலுவலர், ஆட்சியர் ஆய்வு!

மல்லிபட்டினம், நவ.25-
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிபட்டினம் கடலோரப் பகுதியில், புயல் முன்னெச்சரிக்கை பணிகளை கண்காணிக்கும் விதமாக, புதன்கிழமை மாலை, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை துறை இயக்குனருமான என்.சுப்பையன், தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். 

மல்லிப்பட்டினம் துறைமுகம், காரங்குடா புயல் பாதுகாப்பு மையம் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தி, அங்குள்ள நிவாரண முகாம்களில் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என கேட்டறிந்தார். பின்னர் அம்புலியாறு பகுதிக்கு வந்த அவரை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராவ் வரவேற்றார். அம்புலியாற்றின் முகத்துவாரத்தில் தற்காலிகமாக படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். 

அவரிடம்,  சட்டமன்றத்தில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிவித்த அம்புலியாறு தடுப்பணை திட்டப்பணிகளை விரைந்து தொடங்குமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து முடியனாறு பகுதியில் ஆற்று முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்திய சட்டமன்ற உறுப்பினர் ம.கோவிந்தராசு, புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சிறப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை நடத்தினார். 

ஆய்வின்போது, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், பட்டுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், மீன்துறை இயக்குநர் சிவகுமார், சேதுபாவாசத்திரம் அதிமுக  வடக்கு ஒன்றியச் செயலாளர் நாடியும் சிவ. மதிவாணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் அருணாச்சலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், வட்டாட்சியர் க.ஜெயலெட்சுமி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். 


நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தங்கிக்கொள்ள வேண்டுகோள்!

அதிரை நியூஸ்: நவ.25 
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான் என்.சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்  மாவட்டத்தில் நிவர் புயல்  மழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள்துறை இயக்குனருமான என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் பாபநாசம் வட்டம் களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில் இன்று (25.11.2020) நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

இவ் ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்ததாவது:    தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயல் மழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன குறிப்பாக மழை சேதம் மற்றும் பேரிடர் சேதங்கள் ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயல் மழை சேதங்களை மேற்கொள்வதற்கு பேரிடர் மீட்பு குழுவினரும், தன்னார்வ  உறுப்பினர்களும், அரசு அலுவலர்களும்  தொடர்ந்து கண்காணித்து பணியாற்றி வருகின்றனர்.
 
பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட களஞ்சேரியில் வெண்ணாற்றங்கரையில்  பொதுப்பணித்துறை அலுவலகத்தில்  வெள்ளத்தடுப்பு பணிக்காக மணல் முட்டைகள் மற்றும் மரம் அறுவை இயந்திரம் போன்றவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் ஒலையக்குன்னம் ஊராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் புயல் பாதுகாப்பு மையத்திலுள்ள மருத்துவ முகாம், சமையலறை, கழிவறை ஆகிய பகுதிகளை பார்வையிட்டு, சமையலறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தேவையான உணவு தயாரிப்புப் பொருட்கள் மற்றும் மருத்துவ முகாமில் உள்ள மருந்துகளின் கையிருப்பு குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் கேட்டறிந்தார். தொடர்ந்துää பட்டுக்கோட்டை நசுவினியாறு மற்றும் செல்லிக்குறிச்சி ஏரியில் ஆய்வு மேற்கொண்டு தற்போதுள்ள நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் வெளியேற்றப்படும் அளவு ஆகியவை குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் புயல் மழை நேரங்களில் வெளியே வராமல் பாதுகாப்பாக வீட்டிலேயே இருந்திட தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  பாதிப்பு  ஏற்படக்கூடிய  பகுதியிலுள்ள பொதுமக்களும் மற்றும் தாழ்வான  பகுதிகளில்  வசிக்கும்  மக்களையும் கண்டறிந்து 78 வெள்ள நிவாரண தடுப்பு முகாம்களில் 972 ஆண்களும் 1477 பெண்களும் 754 குழந்தைகளும் என 3203 பேர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு குடிநீர் போன்ற அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் படகுகளை போதிய இடைவெளியுடன் நிறுத்துமாறு அறிவுறுத்தினார். மல்லிப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்திற்கு காரைக்காலில் இருந்து வந்துள்ள 15 மீனவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து அதன் பின்னர், பிள்ளையார் திடல் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேராவூரணி ஒன்றியம் அடைக்கதேவன் ஊராட்சியில் அம்புலியாறு நெடுகை பகுதிகளில் மீனவர்களின் படகுகள் பாதுகாப்பாக உள்ளதா என ஆய்வு செய்து பாதுகாப்பான பகுதியில் படகுகளை நிறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தினார்கள். 

நிவர் புயல் இன்று இரவு முதல் நாளை காலைக்குள் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவு எதிர்பார்க்கலாம். பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அருகிலுள்ள பாதுகாப்பு மையங்களில் தாங்களாகவே வந்து தங்கிக் கொள்ள வேண்டும். பாதுகாப்பு மையங்களில் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை மற்றும் அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி 1077 என்ற எண்ணின் மூலம் தெரிவிக்கலாம். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். களப்பணியாளர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். கடற்கரை பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தேவையான உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர். சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்த பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். காற்று வீசும் பகுதிகளில் மின்சார இணைப்பு தற்காலிகமாக துண்டிக்கப்பட்டு, நிலைமை சரியான பிறகு மீண்டும் வழங்கப்படும்.

மேலும் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ள ஈரோடு மற்றும் தேனியிலிருந்து கூடுதலாக 2 அம்மா ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு பாதிப்புகள் தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண் 1962 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் இயக்குனருமான என்.சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பயிற்சி ஆட்சியர் அமித், அக்னியாறு செயற்பொறியாளர் திருமதி.கனிமொழி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராமு, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திருமதி தரணியா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், நவ. 25
ஒவ்வோா் ஆண்டும் நவம்பா் மாதம் மூன்றாம் வாரத்தில் தேசிய பச்சிளம் குழந்தைகள் வார விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில், மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வழிகாட்டுதலின் படி, வாரவிழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் நடந்த நிகழ்வுகளில், பிரசவித்த தாய்மார்களுக்கு பச்சிளம் குழந்தைகளை நல்ல ஆரோக்கியத்துடன் பராமரிக்கும் முறை, குழந்தை பெற்றெடுக்கும் தாய்மாா்களுக்கு சுகாதார அறிவுரைகள், தாய்ப்பாலின் அவசியம் பற்றி விளக்கிக்கூறப்பட்டது. தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டன. பிறந்த குழந்தைகளுக்கு அம்மா குழந்தை நல பரிசுப்பெட்டகங்கள் வழங்கப்பட்டன. 

இதில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அணைத்து மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்று, பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு முறை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


Tuesday, November 24, 2020

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தகவல்!

அதிரை நியூஸ்: நவ.24
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயலுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிவர் புயலால் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திடும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டுள்ளனர். புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்களை பாதுகாத்திட 251 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. பொதுமக்கள் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி தங்களின் புகார்கள் மற்றும் சந்தேகங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக, தஞ்சாவூர் வட்டம், பள்ளியேறி பேய்வாரி மற்றும் வெண்ணலோடை வெண்ணாற்றங்கரை ஆகிய இடங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் என்.சுப்பையன், மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் அவர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். 

மேலும், அப்பகுதியிலிருந்த பேரிடர் மீட்புக்குழுவினரிடம் பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் விளக்கினார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வுகளின்போது பயிற்சி ஆட்சியர் அமித், வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜஸ்டின், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் திருமதி.வேலுமணி, தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.


நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆட்சியர் ஆய்வு (படங்கள்)

அதிரை நியூஸ்: நவ. 24
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் இன்று (24.11.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பட்டுக்கோட்டை வட்டம், தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் நசுவினியாறு மற்றும் பாட்டுவனாச்சி ஆறு முகத்துவாரம் பகுதியில் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நேரில் சென்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர் முகத்துவாரம் பகுதியில் எவ்வித தடையுமின்றி தண்ணீர் சென்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். 

பின்னர், ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தில் ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மணல் திட்டுகளை உடனடியாக அகற்றிடுமாறு அறிவுறுத்தினார். அதன் பின்னர், ராஜாமடம் கீழத்தோட்டம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அங்கு பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா? ஏன மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் ஆய்வு மேற்கொண்டார்.

இவ்வாய்வுகளின்போது பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலச்சந்தர், பொதுப்பணித்துறை கல்லணைகால்வாய் கோட்ட செயற் பொறியாளர் முருகேசன், அக்னியாறு கோட்ட செயற்பொறியாளர் திருமதி.கனிமொழி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Saturday, November 21, 2020

வாக்காளர் சேர்க்கை முகாம்களில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு!

அதிரை நியூஸ்: நவ.21
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியவாறு, கடந்த 16-11-2020 அன்று தஞ்சாவூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் அவர்களால் வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், பொது மக்களின் பார்வைக்காக வருகிற 15-12-2020 வரை அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருக்கும்,  வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021 தொடர்பான பணிகள் 16-11-2020 முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 21-11-2020 (சனிக்கிழமை), 22-11-2020 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-12-2020 (சனிக்கிழமை), 13-12-2020 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமையபெற்றுள்ள 1151 வாக்குச் சாவடியில் மையங்களில் உள்ள 2291 வாக்குச் சாவடிகளில் இன்று (21-11-2020) வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம். 2021 தொடர்பான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது. 

அதன் பொருட்டு, இன்று வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், சென்னை அருங்காட்சியக ஆணையர் எம்.எஸ். சண்முகம், திருவையாறு தொகுதியில் அமையபெற்றுள்ள சீனிவாச ராவ் மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகளான பாக எண் 59 முதல் 64 களில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை முகாம்களை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித் தலைவர், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் திருவையாறு வட்டாட்சியர் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் தெரிவித்ததாவது:- 
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடமிருந்து மாற்றுத்திறனாளிகளின் பட்டியலைப் பெற்று மாவட்டத்திலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். சிறப்பு சுருக்க திருத்தமுறை நடைபெறும் மையங்களில் பேனர் வைத்திட வேண்டும். வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரி இல்லாதவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வயதானவர்கள் மற்றும் சிறப்பு சுருக்க திருத்த முறை குறித்து ஆட்டோவின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவித்திட வேண்டும் என தெரிவித்த வாக்காளர் பட்டியல் பார்வையாளர், படிவம் 6,7,8,8ஏ ஆகியவற்றின் கையிருப்பு குறித்து கேட்டறிந்தார்.

அதன் பின்னர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்ட பொதுமக்கள் மேற்படி நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களின்போது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்திட. படிவம் எண் 6. பெயரை நீக்கம் செய்ய படிவம் எண் 7; ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் எண் 8ஏ பிழையினைத் திருத்தம் செய்ய படிவம் எண் 8 படிவங்களை வாக்குச்சாவடியில் பெற்று பூர்த்தி செய்து அந்தந்த வாக்குச்சாவடியில் வழங்கலாம்.  வருகிற 15-12-2020 வரை மேற்படி விண்ணப்ப படிவங்கள் வாக்காளர்களிடமிருந்து பெறப்படும். மேலும், வாக்காளர்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏற்படும் அனைத்து விதமான சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவித்திட கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 யை அழைத்து தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம் மற்றும் புகார்களை பதிவு செய்து தீர்வு பெறலாம். 

வாக்குச்சாவடிக்கு சென்று படிவம் பெற்று பூர்த்தி செய்து வழங்க இயலாதவர்கள், www.nvsp.in என்ற இணைய தளம் முகவரி வழியே ஆன்லைன் மு்லமாகவும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்ட பொது மக்களைக் கேட்டுக் கொள்கிறார்.


மரண அறிவிப்பு ~ 'ராஃபியா' என்கிற ஹாஜி மு.செ.மு ரபி அகமது (வயது 62)

அதிரை நியூஸ்: நவ. 21
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி மு.செ.மு முகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் வா. அபுல்ஹசன் அவர்களின் மருமகனும், முகமது மீராஷா, ஆதில் அகமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ராஃபியா என்கிற ஹாஜி மு.செ.மு ரபி அகமது (வயது 62) அவர்கள் இன்று அதிகாலை 2 மணியளவில் சி.எம்.பி லேன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (21-11-2020) காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

மரண அறிவிப்பு ~ அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55)

அதிரை நியூஸ்: நவ.21
அதிராம்பட்டினம், புதுத்தெரு வடபுறத்தைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மீரா சாஹிப் அவர்களின் மகனும், முகமது புஹாரி அவர்களின் மருமகனும், மர்ஹூம் சமூன், அபுல்ஹசன், ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், அகமது அன்சாரி அவர்களின் மைத்துனரும், ஹபீப் ரஹ்மான் அவர்களின் மாமனாரும், அகமது அஸ்லம், அகமது அஷ்ரப் ஆகியோரின் மச்சானும், நாசர் அவர்களின் தகப்பனாருமாகிய அகமது பரக்கத்துல்லாஹ் (வயது 55) அவர்கள் இன்று அதிகாலை 12 மணியளவில் காலியார் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று  (21-11-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

Friday, November 20, 2020

மரண அறிவிப்பு ~ ஏ.முகமது ஹனீப் (வயது 32)

அதிரை நியூஸ்: நவ.20
அதிராம்பட்டினம், ஹாஜா நகர் தண்டையா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்  இ. இப்ராஹீம், மர்ஹூம் இ.முகமது ஹனீபா, எம்.ஐ இஷ்ஹாக் ஆகியோரின் பேரனும், மர்ஹூம் 'தண்டையா' என்கிற எல்.கே.எம் ஹாஜா முகைதீன், மர்ஹூம் எல்.கே.எம் அக்பர் ஆகியோரின் சகோதரர் மகனும், எல்.கே.எம் அன்சாரி அவர்களின் மகனும், செய்யது சம்சுதீன், மஸ்தான் இப்ராஹீம் ஆகியோரின் மருமகனும், பசீர் அகமது, முகமது ராவூத்தர் ஆகியோரின் மச்சானும், எம்.அஸ்லம் அவர்களின் மைத்துனரும், ஏ.முகமது இப்ராஹீம் அவர்களின் சகோதரருமாகிய ஏ.முகமது ஹனீப் (வயது 32) அவர்கள் இன்று மாலை 6 மணியளவில் ஹாஜா நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (21-11-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து பட்டுக்கோட்டையில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் கைது (படங்கள்)

பட்டுக்கோட்டை, நவ.20
தடையை மீறி திருக்குவளையில் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி. பாலசுப்பிரமணியன் தலைமையில், அக்கட்சியினர் பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளையில் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை ஈடுபட்டனர்.

இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 247 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.