Pages

Thursday, November 5, 2020

மின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் சேவை தொடக்கம்!

அதிராம்பட்டினம்: நவ.05
அதிரை ஒற்றுமை நலச் சங்கம் சார்பில், அதிராம்பட்டினம் பகுதியில் மின்தடையின் போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் இலவச மின்சாரம் வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அவ்வமைப்பின் நிறுவனத்தலைவர் சா.சம்சுல்ரஹ்மான் கூறியது;
'அதிரை ஒற்றுமை நலச் சங்கம் என்ற அமைப்பின் மூலம் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளில் பயன்படுத்தும் மரக்கட்டில், தண்ணீர் தேக்கி வைக்கும் டிரம், இறந்தவர் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி, சாமியானா பந்தல், நாற்காலிகள், மின் விளக்குகள், தேனீர் கேன், ஸ்டீல் டேபிள் உள்ளிட்ட 9 வகை பொருட்களை அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு கடந்த ஆக.15 முதல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவையை, பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தவரும் பயன்படுத்தி வருகின்றனர். இவற்றை, தன்னார்வலர்கள் சி.அகமது, நவாஸ் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாக, மின்தடையின்போது இறந்தவர் வீடுகளுக்கு ஜெனரேட்டர் மூலம் இலவசமாக மின்சாரம் வழங்குவதற்காக ஜப்பான் நாட்டில் வசிக்கும் அதிராம்பட்டினம் நண்பர்கள் சிலரின் நிதி உதவியில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டில், 5 கேவிஏ புதிய ஜெனரேட்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பயன்படுத்த விரும்புவோர் தன்னார்வலர்கள் சி.அகமது, நவாஸ் ஆகியோரை 80563 22376, 90922 82689 என்ற அலைப்பேசி எண்களில் தொடர்புகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம்' என்றார்.


1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...