.

Pages

Sunday, November 8, 2020

பட்டுக்கோட்டையில் TNTJ மாவட்ட செயற்குழு கூட்டம்!

பட்டுக்கோட்டை, நவ.08
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்  பட்டுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, அவ்வமைப்பின், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கே.ராஜிக் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர் அலி முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் போதை பழக்கம், சினிமா, மற்றும் கலாச்சாரச் சீரழிவுகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை நல்வழிப்படுத்தும்  நோக்கில் நவம்பர் மாதம் 10 ம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம்  தேதி வரை இலக்கை நோக்கி இளைஞனே வா.! என்ற செயல்திட்டத்தை தீவிரப் பிரச்சாரமாக செய்ய இறுக்கின்றோம். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரும் படி இச்செயற்குழுவின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

2. இஸ்லாமியர்களின்  உயிருனும் மேலான நபிகள் நாயகம் அவர்களை கேலிச்சித்திரம் வரைந்தும் , அவர்களைப் பற்றி அவதூறு கிளப்பும் விதமாகவும் சில விஷமிகள் செயல்பட்டுகின்றனர். அவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்பதை இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கின்றது.

3. சமீபத்தில் இஸ்லாமியர்களைப் பற்றி தவறான முறையில் பேசிய பிரான்ஸ் நாட்டு அதிபரை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

4. தமிழகத்தில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு    உள்ளது. இது போதுமானது அல்ல இதை 7 சதவீதமாக அதிகரித்து தர வேண்டுமென நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் பல போராட்டங்களை நடத்தியும் வந்தோம் அதை உயர்த்தி  தருவோம் என காலம் சென்ற  ஜெயலலிதா அவர்கள் ஒரு தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்கள். அம்மாவின் வழியில் பயணிப்பதாக மேடைக்குமேடை முழங்கி வரும் அதிமுக அரசு உடனடியாக இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தரும் படி இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

5. குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற பெயரில் இந்நாட்டு மன்னர்களை அந்நியர்களாக சித்தரிக்கும் கொடுஞ்சட்டத்தை மத்திய அரசு சில மாதங்களுக்கு முன் கொண்டு வந்தது. அதன் பின் இந்தியாவே புரட்சிக்களமாக மாறியது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும் வீரியமிக்க போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியது. தற்போது கொரோனா முடிந்தவுடன் அது நடைமுறைப்படுத்தப் படும் என பாஜக பேசி வருகிறது. அதை இச்செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. 

6. அது நடைமுறைப்படுத்தப்பட்டால் வீரியமிக்க போரட்டங்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையேற்று நடத்தும் என இச்செயற்குழு உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றது.

இக்கூட்டத்தில், மாநில செயலாளர் தாவூத் கைஸர், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் கோவை அப்துர் ரஹீம் உட்பட மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.